பதிவு செய்த நாள்
30
செப்
2014
12:09
வேலூர்: நாராயணி பீடத்தில், ஸ்ரீனிவாச கல்யாண உற்சவம் நடந்தது. வேலூர் திருமலைக்கோடி ஓம் சக்தி நாராயணி பீடத்தில், ஆண்டு தோறும் நவராத்திரி விழா நடக்கிறது. விழாவையொட்டி, தினமும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது. நேற்று முன்தினம் இரவு, ஸ்ரீனிவாச கல்யாணம் நடந்தது. சக்தி அம்மா துவக்கி வைத்தார். இதில், கலெக்டர் நந்தகோபால், பீடம் மேலாளர் சம்பத், நாராயணி அறங்காவலர் சவுந்தரராஜன், தங்கக்கோவில் இயக்குநர் சுரேஷ்பாபு, நாராயணி மருத்துவமனை இயக்குநர் டாக்டர் பாலாஜி உள்பட பலர் பங்கேற்றனர். நாராயணி பீடத்தில், நவராத்திரி முடியும் வரை, தினமும் காலை, 9 மணி முதல் பகல், 12 வரை, மாலை, 5 மணி முதல் இரவு, 8 மணி வரை, தசமஹா வித்யா யாகம் நடந்து வருகிறது.