ஊத்துக்கோட்டை : சுருட்டப்பள்ளி, பள்ளி கொண்டீஸ்வரர் கோவி லில் நடைபெற்று வரும், நவராத்திரி விழாவில் உற்சவர் பணமாலையுடன், மகாலட்சுமி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.இக்கோவில் வளாகத்தில், நவராத்திரி விழா நடைபெற்று வருகிறது. கடந்த 24ம் தேதி முதல், உற்சவர் ராஜராஜேஸ்வரி, காமாட்சி, மீனாட்சி, அன்னபூரணி என, ஒவ்வொரு கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.நேற்றுமுன்தினம் இரவு, உற்சவர் அம்மன் பணமாலைகள் சூட்டப்பட்டு, மகாலட்சுமி கோலத்தில் அருள்பாலித்தார்.