வேலூர்: வேம்புலி அம்மன் கோவிலில், நவராத்திரி விழா நடந்தது. வேலூர் லாங்கு பஜார் வேம்புலி அம்மன் கோவிலில், ஆண்டு தோறும் நவராத்திரி விழா நடக்கிறது. நேற்று முன்தினம் இரவு, அம்மனுக்கு மாவடி சேவை அலங்காரம் நடந்தது. இதில், நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாக அலுவலர் விஸ்வநாதன், உதவி கமிஷனர் பாரி வள்ளல் செய்தனர்.