திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் உள்ள உண்டியல்களை நேற்று திறந்து காணிக்கையை எண்ணியதில், 40.91 லட்சம் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். தமிழகத்தில் பிரசித்திபெற்ற கோவில்களில் ஒன்றான ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் உண்டியல்கள் திறக்கப்பட்டு, பக்தர்கள் செலுத்தி காணிக்கை நேற்று எண்ணப்பட்டது. கோவில் இணை கமிஷனர் ஜெயராமன் முன்னிலையில் உண்டியல் திறந்து, காணிக்கை என்னப்பட்டதில், 40 லட்சத்து, 91 ஆயிரம் ரூபாய் ரொக்கம், 125 தங்கம், 800 கிராம் வெள்ளி ஆகியவற்றை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.