சனீஸ்வரனுக்குரிய ஆடை, அவருக்கு படைக்கும் எள் மற்றும் வாகனமான காகம் இவை எல்லாம் கருப்பு நிறத்தில் இருக்கிறது. கருப்புநிறம் தன் மீது படும் ஒளி மற்றும் வெப்பத்தை கிரகித்துக் கொள்ளக்கூடியது. சனீஸ்வரன் அவரவர் செய்த பாவத்தின் தன்மைக்கேற்றபடி இருளில் தள்ளி விடுகிறார். அவரை நல்வழிபடுத்தியபின் துன்பம், தோஷங்களை தன் பக்கம் ஈர்த்துக் கொண்டு நன்மை தருகிறார். எனவே, கருப்பு நிறம் அவருக்கு தரப்பட்டிருக்கிறது.