திருவிழாவில் ரத்தம் சொட்டச் சொட்ட நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04அக் 2014 01:10
கோவை: கோவையில் நடந்த கோவில் விழாவில், பக்தர்கள் ரத்தம் சொட்டச் சொட்ட கத்தி போட்டு, ராமலிங்க சவுடாம்பிகையம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். கோவையில் வசிக்கும் தேவாங்க செட்டியார் சமூகத்தை சேர்ந்த மக்கள் ஆண்டுதோறும் விஜயதசமி விழாவை வெற்றிவிழாவாக கொண்டாடி வருகின்றனர். வேண்டுதலை நிறைவேற்றும் அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். இதை கத்தி போடும் திருவிழாவாக அச்சமூகத்தை சேர்ந்த மக்கள் கொண்டாடுகின்றனர். விஜயதசமி விழாவான நேற்று அதிகாலை சாய்பாபாகாலனி, அழகேசன் ரோடு, நெசவாளர் காலனி பகுதியிலுள்ள சவுடம்மன் கோவிலிலிருந்து கத்திபோடும் ஊர்வலம் துவங்கியது. இதில் ஏராளமான தேவாங்க சமூகத்தை சேர்ந்த இளைஞர்கள் பங்கேற்றனர். இரு கைகளிலும் நீளமான கத்திகளை கொண்டு, தங்களது கைகளின் மேற்பகுதியில் வெட்டி நேர்த்திக்கடன் செலுத்தினர். ஊர்வல முடிவில் ராஜவீதியிலுள்ள சவுடம்மன் கோவிலை அடைந்தனர். முடிவில் அம்மனை வழிபட்டு, நேர்த்திக்கடன் நிறைவேற்றினர். கோவை நகரில் போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டிருந்தது.