பதிவு செய்த நாள்
04
அக்
2014
01:10
திருவான்மியூர்; திருவான்மியூரில், இந்து சமய அறநிலைய துறையால், 13 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும், திருமண மண்டப பணிகள் விரைவில் முடிந்து, 2015, மார்ச் மாதம் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர். திருவான்மியூர், மருந்தீசுவரர் கோவிலுக்கு சொந்தமாக, கிழக்கு கடற்கரை சாலையில், புலம் எண் 106/3 (ம) 6 ல் இடம் உள்ளது. அங்கு, 178 கார்கள், 200 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் வசதி கொண்ட வாகன நிறுத்தம், தரைத் தளத்தில், 552 இருக்கைகள், முதல் தளத்தில், 1,227 இருக்கை கள், சுற்றுப்புறத்தில், 160 இருக்கைகள், தனி மின்மாற்றி, முழுவதும் குளிர்சாதன வசதி என, மொத்தம், ௫,996 ச.மீ., பரப்பள வில், 13 கோடி ரூபாய் செலவில், திருமண மண்டபம் ஒன்றை, இந்து சமய அறநிலைய துறை கட்டி வருகிறது. இதுகுறித்து, அறநிலைய துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,பல்வேறு காரணங்களால், கடந்த இரு ஆண்டுகளாக மண்டப பணியில் தொய்வு இருந்தது. தற்போது பணிகள் துவங்கி நடந்து வருகின்றன. 2015, மார்ச் மாதத்தில், மண்டபம் பயன்பாட்டிற்கு வரும்,என்றார்.