பதிவு செய்த நாள்
04
அக்
2014
01:10
பெங்களூரு: பாரதி நகர் வெங்கடேச பெருமாள் கோவிலில், இன்று நடைபெறும் புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமை பிரம்மோற்சவம் விழாவில், சுவாமிக்கு வைரக் கிரீடம் அணிவிக்கப்படுகிறது. பெங்களூரு, திம்மையா ரோடு கிராஸ் பாரதி நகரிலுள்ள, ரீ வெங்கடேச பெருமாள் சன்னிதி பக்தானந்த சபா அறக்கட்டளை சார்பில், புரட்டாசி சனிக்கிழமை விழா, ஆண்டுதோறும் பிரம்மோற்சவ விழாவாக கொண்டாடப்படுகிறது. புரட்டாசி முதல் சனிக்கிழமையன்று அபிஷேகம், தோமாலை சேவை, சேஷ வாகனம்; இரண்டாவது சனிக்கிழமையன்று அபிஷேகம், சுவாமிக்கு கல்யாண உற்சவம் ஆகியவை நடந்தன. மூன்றாவது சனிக்கிழமையான இன்று காலை, அபிஷேகம், தோமாலை சேவைக்கு பின், சுவாமி வெள்ளி கவசத்துடன், வைர கிரீடம் அணிவித்து ஆராதனை, மகா ஹோமம், உற்சவ மூர்த்தி திருவீதி உலா நடைபெறுகிறது. பகலில், பக்தர்களுக்கு அன்னதானம்; மாலையில், நாலாயிர திவ்யபிரபந்த சேவை; இரவில் பக்தர்களின் பஜனை நடக்கிறது. பக்தர்களுக்காக, கோவிலில் துலாபார சேவை செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது. திருமணமாகாதோர், நோய்நொடி உள்ளோர், மனக்குறை உள்ளோர், புரட்டாசி மாத விழாவில் பங்கேற்று, பெருமாளின் அருள் பெறுமாறு, கோவில் நிர்வாகத்தினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.