பதிவு செய்த நாள்
04
அக்
2014
01:10
புதுச்சேரி: லஷ்மி ஹயக்ரீவர் கோவிலில், வித்யாரம்பம் நிகழ்ச்சி நேற்று நடந்தது. முத்தியால்பேட்டை, ராமகிருஷ்ணா நகரில், லஷ்மி ஹயக்ரீவர் கோவில் அமைந்துள்ளது. இங்கு, விஜயதசமியை முன்னிட்டு, வித்யாரம்பம் நிகழ்ச்சி நேற்று நடந்தது. விஜயதசமி தினத்தன்று, சரஸ்வதிக்கு, லஷ்மி ஹயக்ரீவர் உபதேசம் செய்ததாக ஐதீகம். இதன்படி, குருவாக உபதேசிப்பது போன்ற சிறப்பு அலங்காரம், லஷ்மி ஹயக்ரீவருக்கு செய்யப்பட்டு இருந்தது. விழாவில், ஏராளமான பெற்றோர் கலந்து கொண்டு, முதன்முறையாக பள்ளிக்குச் செல்லும் தங்களது குழந்தையின் கையை பிடித்து, பரப்பி வைக்கப்பட்டிருந்த நெல் மணிகளில் எழுதினர். சுவாமிக்கு விசேஷ அர்ச்சனை செய்து வழிபட்டனர்.