பதிவு செய்த நாள்
06
அக்
2014
01:10
திருவண்ணாமலை: சொத்து குவிப்பு வழக்கில், சிறையில் இருந்து ஜெயலலிதா விடுதலையாக வேண்டி, 1,008 பெண்கள் பால்குடம் எடுத்து, அண்ணாமலையாருக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர்.திருவண்ணாமலையில் தெற்கு மாவட்ட அ. தி.மு.க.,வை சேர்ந்த, 1,008 பெண்கள், பால் குட ஊர்வலம் எடுத்தனர். கம்பத்து இளையனார் முருகன் சன்னதியிலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு தேரடி வீதி, திருவூடல் வீதி, மேற்கு கோபுர வீதி, பெரிய வீதி வழியாக மீண்டும் ராஜகோபுரம் வந்தடைந்து கோயிலினுள் சென்று அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலையம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட்டனர்.மேலும், 21 பெண்கள் தீச்சட்டி ஏந்தி வீதி உலா வந்து வழிபட்டனர். தொடர்ந்து, 201 பெண்கள் பச்சையம்மன் கோவிலில் மண்சோறு சாப்பிட்டு வழிபாடு நடத்தினர்.