பெண்கள் தங்கள் கணவனைத் தவிர, மற்றவர்களிடம் மிகுந்த ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.ஒருமுறை நபிகள்பெருமானாரைச் சந்திக்க பார்வை தெரியாத ஒருவர் வந்தார். அவரது பெயர் உம்மி மக்துõம். அப்போது நாயகம்(ஸல்) அவர்கள், தனதுதுணைவியார் ஆயிஷாஅம்மையாருடன் பேசிக் கொண்டிருந்தார்கள். பார்வை தெரியாதவர் வீட்டிற்குள்வந்ததும், தனது மனைவியை உள்ளே போகச் சொன்னார்கள். ஆயிஷா அம்மையாருக்குஎதுவும் புரியவில்லை. பிற ஆண்கள் வந்தால், பெண்கள் வீட்டிற்குள் எழுந்து சென்றுவிடுவது அரபு நாட்டில்வழக்கமாக இருந்தது. ஆனால், பார்வையற்ற ஒருவர் தங்கள் வீட்டிற்குள் வந்தபோது, எதற்காக அண்ணலார் தன்னை உள்ளே போகச்சொன்னார்கள் என்பது அம்மையாருக்கு புரியவில்லை. நாயகமும், அந்தநண்பரும் நீண்டநேரமாக பேசிக்கொண்டிருந்தனர். பின் அவர் சென்று விட்டார். அதன்பிறகு ஆயிஷா அம்மையார், அண்ணலாரே! வந்தவருக்குத்தான் பார்வை கிடையாதே, அப்படி இருக்கும்போது என்னை ஏன் உள்ளே போகச்சொன்னீர்கள்? என்று கேட்டார்கள். அதற்கு நாயகம்(ஸல்) அவர்கள்,அவரால் எதையும் பார்க்கஇயலாது என்பது உண்மைதான். ஆனால், உம்மால்அவரைப்பார்க்க முடியுமே!அதனால்தான் உம்மை உள்ளே போகும்படி சொன்னேன், என்றார்கள்.இந்த அளவுக்கு பெண்களுக்கு ஒழுக்கத்தைப் போதிக்கிறது இஸ்லாம்.