பதிவு செய்த நாள்
07
அக்
2014
02:10
மனைவி சம்பாதித்தால், அந்த பணம் முழுவதும் தனக்கே சொந்தம் என்பதுபோலகணவனும், அவனது வீட்டாரும் உரிமை கொண்டாடுகின்றனர். வாழ்விற்கு மிகவும்இன்றியமையாதது பணம். அந்த செல்வத்தை உழைப்பினால் திரட்டும் உரிமையைஆண்களைப் போல, பெண்களுக்கும் இஸ்லாம் வழங்கியிருக்கிறது. அதேநேரம் பெண்கள் தாங்கள்சம்பாதிக்கும் பணத்திலிருந்து தமது கணவருக்கு செலவு செய்யவேண்டிய அவசியம் எதுவுமில்லை. ஆனால், ஆண்கள் தங்கள் மனைவி, மக்களுக்காக செலவு செய்வது கட்டாயக் கடமை ஆகும். உங்களில் எவருக்கேனும் அல்லாஹ் செல்வத்தைவழங்கினால், அவர் முதலில் தனக்கும், பின்னர் தனது வீட்டாருக்கும் செலவு செய்யட்டும், என்று நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் சொல்கிறார்கள். வீட்டார் என அவர் குறிப்பிடுவது, மனைவி, மக்களை ஆகும். ஒருவேளை கணவன், பொருள் தர மறுத்தால் தனக்கும், தன் மக்களுக்கும் அவனுக்கு தெரியாமலேயே நியாயமானஅளவுபொருளைஎடுத்துக்கொள்ளும்உரிமைகூட மனைவிக்கு வழங்கப்பட்டுள்ளதாக,நாயகத்தின் துணைவியார் ஆயிஷா அம்மையார் அவர்கள் தெரிவித்துள்ளார்கள். ஒருமுறை ஹிந்தா என்ற பெண்மணி நபிகள் நாயகம்(ஸல்) அவர்களிடம் வந்து,என் கணவர் கஞ்சத்தனம் உள்ளவராக இருக்கிறார்.அவருக்கு தெரியாத நிலையில், நான் எடுக்கும் பணத்தை தவிர, அவர் எனக்கோ, என்குழந்தைகளுக்கோ போதுமான அளவு பணம் கொடுப்பதில்லை, என முறையிட்டார்.அப்போது நாயகம் அவர்கள் அந்த அம்மையாரிடம்,உனக்கும், உன்குழந்தைகளுக்கும் போதுமான பணத்தை நியாயமான அளவு எடுத்துக்கொள்ளலாம், என்று சொல்லி அனுப்பினார்கள்.இதன்மூலம், கணவனே மனைவிக்கு செலவழிக்க வேண்டுமென்பதும், மனைவி கணவனுக்காக செலவு செய்ய வேண்டியது கட்டாயம்இல்லையென்பதும் தெளிவாகிறது.