பூஜை நேரத்தில் மட்டுமல்ல! வீட்டில் சமைக்கும் போதும் உங்கள் இஷ்ட தெய்வத்திற்குரிய ஸ்லோகங்களைச் சொல்லிக் கொண்டே வேலை செய்யலாம். இவ்வாறு செய்தால் சமைக்கும் சாதம் கடவுளுக்கு படைத்த பிரசாதமாகி விடும். சாதம் என்றால் சாதாரண சோறு. பிர என்றால் கடவுள். கடவுளுக்குரிய சாதம் என்பதையே பிரசாதம் என்கிறோம். மகான் கபீர்தாசர் தறி நெய்யும் போது ராம, ராம, ராம என்று சொல்லிக் கொண்டே நெய்வார். காந்திஜி ராமநாமம் சொல்லிக் கொண்டே ராட்டையில் நுõல் நுõற்பார். மகான் ராமதாசர் இதுபற்றி குறிப்பிடும் போது, குளித்தாலும், சமைத்தாலும், தண்ணீர் எடுத்தாலும், தெருவில் நடந்தாலும், வேலை செய்தாலும் எப்போதும் கடவுள் நாமத்தை ஜெபித்துக் கொண்டிருங்கள். இதனால், மனக்கவலை தீரும். மனதில் மகிழ்ச்சி நிலைக்கும், என்கிறார்.