சிவன் சந்நிதிக்கு எதிரில் நந்திதேவர் வீற்றிருப்பார். இவரை பிரதோஷ நேரத்தில் அபிஷேகத்தின் போது தரிசிப்பது சிறப்பு. கோயிலில் சிவனைதரிசிக்கச் செல்லும் போதெல்லாம், இவரிடம் அனுமதி பெற்றே செல்ல வேண்டும் என்பது நியதி. இதற்காக தனி ஸ்லோகம் ஒன்றும் உண்டு.நந்திகேச மஹாபாகசிவ தியான பராயண! உமா சங்கர ஸேவார்த்தம்அனுக்ஞாம் தாதுமர்ஹஸி!!நந்தீஸ்வரரே! எப்போதும் சிவதியானத்தில் ஈடுபடுபவரே! நான் இப்போது கோயிலுக்குள் சென்று உமாதேவியோடு வீற்றிருக்கும் சிவபெருமானை தரிசிக்கப் போகிறேன். அதற்கு நீங்கள் இப்போது அனுமதி அளிக்க வேண்டும் என்பது இதன் பொருள். சமைக்கும் போது ஸ்லோகம் சொல்லுங்க!