மதுரை: ”சந்திரகிரகணத்தை யொட்டி, மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இன்று (அக்.,8) காலை 11:30 மணிக்கு சாத்தப்படும் நடை, கிரகண கால அபிஷேகம் நடந்து மாலை 6:30 க்கு திறக்கப்பட்டு, வழக்கமான பூஜைகள் நடக்கும்,” என இணை கமிஷனர் நடராஜன் தெரிவித்துள்ளார். கூடலழகர் பெருமாள் கோயிலில் இன்று பகல் 12:00 மணிக்கு நடை சாத்தப்பட்டு, இரவு 7:00 மணிக்கு திறக்கப்படும். பூஜைகள் முடிந்து இரவு 8:00 மணிக்கு ஐந்து கருட சேவை கோயில் முன் புறப்பாடாகி, நான்கு மாசி வீதிகள் வழியாக இரவு 10:00 மணிக்கு கோயில் வந்து சேரும், என உதவி கமிஷனர் செல்வகுமாரி தெரிவித்துள்ளார். அழகர்கோவில் சுந்தரராஜபெருமாள் கோயிலில், அதிகாலை 4:30 க்கு நடை திறக்கப்பட்டு, பகல் 12:30 க்கு சாத்தப்படும். பின்னர் மதியம் 3:30 முதல் இரவு 8:00 மணி வரை நடை திறக்கப்படும். சோலைமலை முருகன் கோயிலில் காலை 10:30 முதல் இரவு 6:30 மணி வரை நடை சாத்தப்படும். அதன் பின், நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்படும், என இணை கமிஷனர் வரதராஜன் தெரிவித்து உள்ளார்.