பதிவு செய்த நாள்
08
அக்
2014
10:10
திருப்பதி : திருமலையில், பிரமோற்சவத்திற்காக நிறுத்தப்பட்டிருந்த மூத்த குடிமக்கள் தரிசன வரிசை, மீண்டும் செயல்பாட்டிற்கு வந்து உள்ளது. திருமலையில், கடந்த வாரம் வருடாந்திர பிரம்மோற்சவம் நடந்தது. இதற்காக, கோவில் முன் உள்ள மூத்த குடிமக்கள் தரிசன வரிசை அகற்றப்பட்டது. மேலும், பிரம்மோற்சவ நாட்களில், மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் தரிசனம் ரத்து செய்யப்பட்டது. பிரம்மோற்சவம் நிறைவு பெற்றதையொட்டி, 6ம் தேதி முதல், மூத்த குடிமக்கள் தரிசன வரிசை மீண்டும் துவங்கப்பட்டது. இதுவரை, ஏழுமலை யான் கோவில் முன் இருந்த, மூத்த குடிமக்களின் காத்திருப்பு வரிசை, தற்போது தெற்கு மாடவீதிக்கு மாற்றப்பட்டு உள்ளது. இங்கு, புதியதாக அமைக்கப்பட்ட, ’ஷெட்’டில், வயோதிகர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்காக, நாற்காலிகள், மின்விசிறிகள், ’டிவி’ உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.