காரியாபட்டி :காரியாபட்டி சக்தி மாரியம்மன் கோயிலில் "ஜெ ., வுக்கு ஜாமின் கிடைக்க அ.தி.மு.க.,வினர் யாகம் வளர்த்தனர். 108 பால்குடம் எடுத்து, 108 தேங்காய் உடைத்து சிறப்பு பூஜைகள் செய்தனர். ஒன்றிய செயலாளர் ராமமூர்த்தி தலைமை வகித்தார். பழனி, சேர்மன் முத்துலட்சுமி, நகர செயலாளர் விஜயன், இலக்கிய அணி முருகன் முன்னிலை வகித்தனர். ஒன்றிய கவுன்சிலர்கள் கவிதாரகுபதி, இந்திரா, கார்த்திகா, கூட்டுறவு வீட்டு வசதி வாரிய துணைத் தலைவர் விஜயராஜன், கவுன்சிலர்கள் உமாவதி, பெரியசாமி கலந்து கொண்டனர்.