இன்று சந்திரோதய கவுரி, உமா விரதம்; பார்வதியை பூஜிக்க கணவன் மனைவி ஒற்றுமை ஏற்படும்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09அக் 2025 10:10
பார்வதி தேவியின் வடிவமான கௌரி தேவிக்கான விரதமாகும். வீட்டில் சந்திரனின் கதிர்கள் விழும் இடத்தில் அம்மனை வைத்து வழிபட வேண்டும். கோயிலில் சிவனையும், அம்மனையும் வழிபட சிறப்பான பலன் கிடைக்கும். இன்று பார்வதியை பூஜிக்க கணவன் மனைவிக்குள் ஒற்றுமை, பாசம் ஏற்படும். அம்மனை வழிபட வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். சந்திரோதய கவுரியில் விரதமிருந்து வழிபட மனக் குழப்பங்கள் நீங்கும், மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆரோக்கியம் கிடைக்கும். சுபகாரிய தடைகள் யாவும் விலகும்.
குடும்ப ஒற்றுமை மற்றும் சர்வ மங்களங்களும் உண்டாக்கும் உமா மகேஸ்வர விரதம் இன்று. திருக்கைலையில் பொன்னும் மணியும் சேர்ந்து அமைந்த ஆசனத்தில் சிவபெருமான் தமது தேவியுடன் எழுந்தருளியுள்ளார். சிவபெருமானே உலக உயிர்கள் அனைத்திற்கும் தந்தையாவார். அதுபோல உமாதேவியே உலகத்திலுள்ள அனைத்து உயிர்களுக்குமே அன்னையாக விளங்குபவள். அவர் தன்னுடைய இறைவனாகிய சிவபெருமானின் என்னப்படியே அனைத்துச் செயல்களையும் செய்து வருகின்றார். பூவிலிருந்து மணத்தையும், நெருப்பிலிருந்து புகையையும் எப்படி பிரிக்க முடியாதோ அதுபோல் இவர் சிவத்திடம் ஐக்கியமானவராவர். கருணையே வடிவான இவரை வழிபட நல்லதே நடக்கும்.