உத்தமபாளையம்: தமிழ்நாடு விஸ்வகர்ம கைவினைஞர்கள் முன்னேற்ற சங்கம் மற்றும் விஸ்வகர்மா, காயத்ரிதேவி கோயில் அறக்கட்டளை இணைந்து நடத்திய விஸ்வகர்ம ஜெயந்தி இரண்டாம் ஆண்டு விழா சுருளித்தீர்த்தத்தில் நடந்தது. விழாக்குழு தலைவர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார்.மாவட்ட செயலாளர் குருசாமி, விஸ்வகர்மா, காயத்ரி தேவி கோயில் நிறுவனத் தலைவர் விலங்குமணி முன்னிலை வகித்தனர்.நிர்வாகிகள் மணிபாரதி, ராஜேந்திரன், குணசேகரன், சுகுமார் வரவேற்றனர். பொள்ளாச்சி கபீர்தாஸ் விஸ்வகர்ம உருவ படத்தை திறந்து வைத்து ஐவர்ணக் கொடியை ஏற்றினார். சிறப்பு மலர் வெளியிடப்பட்டது. விஸ்வகர்ம ஜெயந்தி குறித்தும், சமுதாயத்தின் முன்னேற்றம் வளர்ச்சி நிலைகள், எதிர்கால திட்டங்கள், அரசிடம் பெற வேண்டிய சலுகைகள் உள்ளிட்டவைகள் குறித்து பேசினர்.