திருக்கழுக்குன்றம் : திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலின் மலையடிவாரத்தில் உள்ள, சிந்தாதிரி விநாயகர் கோவிலில் பாலாலயம் நேற்று முன்தினம் நடைபெற்றது. திருக்கழுக்குன்றத்தில், பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட பிரசித்தி பெற்ற வேதகிரீஸ்வரர் கோவில் இந்து சமய அறநிலைய துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோவிலில், 12 ஆண்டுகளுக்கு முன் கும்பாபிஷேகம் நடைபெற்றது.தற்போது, கோவிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்யப்பட்டது. நன்கொடையாளர்கள் நிதி மூலம், ஒரு கோடி ரூபாய் மதிப்பில் சீரமைக்கப்பட்டு, பணிகள் முடியும் நிலையில் உள்ளன.அதை தொடர்ந்து, மலையடிவாரத்தில் உள்ள சிந்தாதிரி விநாயகர், கனநாதர் மற்றும் மண்டபபிரகார பரிவாரமூர்த்திகளின் கோவில்களைபுதுப்பிக்க, நேற்று முன்தினம் காலை 7:00 மணி அளவில், பாலாலயம் நடைபெற்றது.