இளையான்குடி : இளையான்குடி,மாதவநகர் சிறுபுக்குளி கூத்தாயி அம்மன் கோயிலில் மண்டலாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று காலை சிறப்பு ஹோமங்கள்,பூஜைகள் நடந்தன. சுவாமிக்கு அபிஷேகம் நடந்தது. மாலை 6 மணிக்கு திருவிளக்கு பூஜை நடந்தது. பூஜைகளை கண்ணமங்கலம் திருவேங்கடம் பட்டர் தலைமையிலான சிவாச்சாரியர்கள் செய்திருந்தனர்.