கீழக்கரை : அலவாக்கரைவாடியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவில் தேரோட்ட நிகழ்ச்சி நடந்தது. தட்டாந்தோப்பு நாராயணசுவாமி கோயிலில் இருந்து உற்சவரான அம்மன் தேர் நகரின் வீதிகளின் வழியாக காவடிகள் முன்செல்ல வீதியுலா வந்தது. வாரியார் சுவாமிகளின் சீடர் தேச மங்கையற்கரசியின் ஆன்மிக சொற்பொழிவு நடந்தது. பின் "இன்றைய அறிவியல் உலகில் மக்களுக்கு ஆன்மிகம் அவசியமா? இல்லையா? என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடந்தது. ஏற்பாடுகளை திருப்பணிக்குழுவினர் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.