பதிவு செய்த நாள்
20
அக்
2014
12:10
திருத்தணி: அம்மன் கோவில் பூட்டை உடைத்து, பீரோவில் வைத்திருந்த பணம், பட்டுப்புடவைகள் மற்றும் கலசங்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். திருத்தணி, சுப்ரமணிய நகரில், துர்காதேவி கருமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலின் பூசாரியாக முனிகிருஷ்ணன் பணிய õற்றி வருகிறார். நேற்று முன்தினம், இரவு 8:00 மணிக்கு பூசாரி கோவிலை பூட்டிக் கொண்டு, வீட்டிற்கு சென்றார். நேற்று காலை 6:00 மணிக்கு ÷ காவிலை திறக்க வந்த போது, கோவிலின் இரும்பு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டனர். மூலவர் அறையில் இருந்த பீரோவை உடைத்து, அதிலிருந்த விலை உயர்ந்த, ஆறு பட்டுப்புடவைகள், ஐந்து கலசங்கள், 1,500 ரூபாய் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். பூ சாரி, முனிகிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில், திருத்தணி போலீசார் விசாரித்து வருகின்றனர்.