பதிவு செய்த நாள்
23
அக்
2014
02:10
புதுச்சேரி: சாரத்திலுள்ள, சுப்ரமணிய சுவாமி கோவிலில் கந்தர் சஷ்டி சூரசம்ஹார விழாவை முன்னிட்டு, நாளை (24ம் தேதி) கொடியேற்றம் நடக்கிறது.புதுச்சேரி சாரத்திலுள்ள முத்துவிநாயகர், வள்ளி தேவசேனா சமேத, சுப்ரமணிய சுவாமி, நாகமுத்து மாரியம்மன் தேவஸ்தானம் சார்பாக, கந்தர் சஷ்டி சூரசம்ஹார பிரம்மோற்சவ விழா இன்று துவங்கி, செப்., 3ம் தேதி வரை நடக்கிறது. இன்று (23ம் தேதி) மாலை 6.00 மணிக்கு, விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, இரவு 7.00 மணிக்கு தீபாராதனை நடக்கிறது. 24ம் தேதி காலை 9.00 மணியிலிருந்து 10.30 மணிக்குள் காப்புக் கட்டுதலும், கொடியேற்றமும் நடக்கிறது.30ம் தேதி மாலை 4.00 மணியளவில் அபிஷேகம், இரவு 7.00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. தொடர்ந்து, வரும் 3ம் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்க உள்ளது.விழாவிற்கான ஏற்பாடுகளை, கோவில் அறங்காவலர் குழுவினர் செய்து வருகின்றனர்.