பதிவு செய்த நாள்
23
அக்
2014
02:10
மாமல்லபுரம்: மாமல்லபுரம், ஸ்தலசயன பெருமாள் கோவிலில், பூதத்தாழ்வார் அவதார மகோற்சவம் நாளை (23ம் தேதி) துவங்கி, அடுத்த மாதம் 1ம் தேதி வரை, நடைபெறுகிறது.
31ம் தேதி தேர்: மாமல்லபுரம், ஸ்தலசயன பெருமாள் கோவிலில், அவரது அவதார மகோற்சவம், நாளை துவங்குகிறது. இதையொட்டி, அன்று காலை 10:00 மணிக்கு, அவருக்கு சிறப்பு அபிஷேகம்; திருமஞ்சனம்; மாலை 3:00 மணிக்கு, நாலாயிர திவ்விய பிரபந்தம்; அதைத்தொடர்ந்து, திருப்பாவை சாற்றுமறை. மாலை 5:00 மணிக்கு, வீதியுலா; 6:00 மணிக்கு, திருவாய்மொழி சேவை என, நடைபெறும். இச்சேவைகள், வரும் 30ம் தேதி வரை, தினமும், மேற்குறிப்பிட்ட நேரத்தில் நடைபெறும்.
28ம் தேதி, காலை 8:00 மணிக்கு, பெருமாள், தாயார், மணவாள மாமுனி, பூதத்தாழ்வார் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம்; இரவு 8:30 மணிக்கு, மணவாள மாமுனிக்கு சாற்றுமறை. 31ம் தேதி, காலை 8:30 மணிக்கு, பூதத்தாழ்வார், திருத்தேரில் வீதியுலா; மாலை 4:00 மணிக்கு, ஸ்தலசயன பெருமாள், நிலமங்கை தாயார், பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார் ஆகியோருக்கு அபிஷேகம்; இரவு 7:30 மணிக்கு, வீதியுலா; கோவில் திரும்பியபின், திருவாய்மொழி சேவை மற்றும் மரியாதை.
நவம்பர் மாதம் 1ம் தேதி காலை 7:00 மணிக்கு, பூதத்தாழ்வார் மூலவர் அபிஷேகம்; அலங்கார உற்சவருக்கு, தாயார், ஆண்டாள், நரசிம்மர், ராமர் ஆகியோரிடம் மரியாதை; இறுதியாக, பெருமாளிடம் மரியாதை மற்றும் திருக்கைத்தல சேவை; பகல் 12:00 மணிக்கு, ஆதிவராக பெருமாள் கோவில் சென்று, அவரிடம் மரியாதை பெற்றபின், அவதார பூந்தோட்டத்தில் பார்வை;
விடையாற்றி உற்சவம்: மாலை 4:00 மணிக்கு, பூதத்தாழ்வார், பெருமாள், தாயார், திருமங்கையாழ்வார் ஆகியோருக்கு அபிஷேகம் மற்றும் திருப்பாவை சேவையை தொடர்ந்து, வீதியுலா; இரவு 7:00 மணிக்கு, திருப்பதி, ஸ்ரீரங்கம், காஞ்சிபுரம், திருவல்லிக்கேணி, திருநீர்மலை, திருநின்றவூர் ஆகிய திவ்வியதேச கோவில்களின் மரியாதை. 2ம் தேதி விடையாற்றி உற்சவம்.