பதிவு செய்த நாள்
30
அக்
2014
02:10
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், கடந்த, 30 நாட் களில், 45.73 லட்சம் ரூபாயை, பக்தர்கள் உண்டியலில் காணிக்கையாக செலு த்தியுள்ளனர். திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு, தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து மூலவரை தரிசித்து செல்கின்றனர். பக்தர்கள் த ங்கள் வேண்டுதலை நிறைவேற்ற பணம், தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களை காணிக்கையாக உண்டியலில் செலுத்துகின்றனர். கடந்த மாதம், 28ம் தேதி துவங்கி, அக்., 27ம் தேதி வரை, பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை, நேற்று முன்தினம், கோவில் தக்கார் ஜெய்சங்கர், இணை ஆணையர் புகழேந்தி ஆகியோர் முன்னிலை யில் திறந்து எண்ணப்பட்டது. இதில், 150க்கும் மேற்பட்ட கோவில் ஊழியர் கள் ஈடுபட்டனர். ஒரு மாதத்தில், 45 லட்சத்து 73 ஆயிரத்து 960 ரூபாய், 224 கிராம் தங்கம் மற்றும் 2,745 கிராம் வெள்ளி ஆகியவை கோவிலுக்கு வருவாயாக கிடைத்துள்ளன.