புதுச்சேரி: புதுச்சேரி முருகர் கோவில்களில் நேற்று இரவு சூரசம்ஹாரம் நடந்தது. லாஸ்பேட்டை, சிவசுப்ரமணிய சுவாமி தேவஸ்தானம் சார்பில், கந்த சஷ்டி சூரசம்ஹார விழா, கடந்த 24ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. சூர சம்ஹாரம் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதையொட்டி, இரவு 7.00 மணிக்கு, முத்து ரதத்தில் சுவாமி புறப்பாடு நடந்தது. சூரசம்ஹாரத்திற்கு பிறகு, சுப்ரமணிய சுவாமி மயில் வாகனத்தில் வீதியுலா வந்து அருள் பாலி த்தார். சுப்பையா சாலை கவுசிக பாலசுப்ரமணியர் கோவில், சாரம், வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணியர் சுவாமி கோவிலில் சூரசம்ஹார விழா நடந்தது.