பதிவு செய்த நாள்
03
நவ
2014
12:11
ராசிபுரம் : வரும், 6ம் தேதி, ராசிபுரம் மாரியம்மன் கோவிலில், தேர்த்திருவிழா மற்றும் அக்னி குண்டம் இறங்கும் விழா நடக்கிறது. ராசிபுரம் மாரியம்மன் கோவிலில், வரும், 6ம் தேதி தேர்த்திருவிழா நடக்கிறது. ராசிபுரம் மாரியம்மன் கோவிலில், ஐப்பசி மாத தேர்திருவிழா, கடந்த, அக்டோபர், 21ம் தேதி, பூச்சாட்டுதலுடன் துவங்கியது. நாளை (நவ., 4) கொடியேற்று விழா, 5ம் தேதி பொங்கல் விழா மற்றும் அன்றிரவு, 10 மணிக்கு அக்னி குண்டம் பற்ற வைக்கப்படும்.அடுத்த நாள் (நவ., 6) அதிகாலை, 5 மணிக்கு, ராசிபுரம் சுற்று வட்டாரத்தை சேர்ந்த பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள், அக்னி குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். அன்று பகல், 12 மணிக்கு ஸ்வாமி சர்வ அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.மாலை, 4 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்து இழுக்கப்படும். வரும், 7ம் தேதி திருத்தேர் நிலை சேருகிறது. அன்றிரவு, உடற்கூறு வண்டி வேடிக்கை நிகழ்ச்சி நடக்கிறது. வரும், 8ம் தேதி கட்டளைதாரர்கள் சார்பில் சத்தாபரணம், 9 ம் தேதி, மஞ்சள் நீராட்டு விழா, 10ம் தேதி முதல், 20ம் தேதி வரை விடையாற்றி கட்டளைதாரர் நிகழ்ச்சி நடக்கிறது.