சிவகாசி : இந்து முன்னணி சார்பில் சிவகாசி மற்றும் அதை சுற்றி உள்ள கிராமங்களில் ராமர் ரத ஊர்வலம் வந்தது. ரதத்தில் ராமர், சீதாதேவி, லட்சுமணன், ஆஞ்சநேயர், விநாயகர் சாமி சிலைகள் அலங்கரிக்கப்பட்டு செங்கமலநாச்சியார்புரம், சிலோன் காலனி, ராதாகிருஷ்ணன் காலனி, நேரு காலனி, லிங்கபுரம் காலனி பள்ளபட்டி, ஆமரத்துப்பட்டி ஆகிய கிராமங்களில் வீதி உலா வந்தது. ஏற்பாடுகளை சிவகாசி இந்து முன்னணி நிர்வாகிகள் செய்தனர்.