தாடிக்கொம்பு : தாடிக்கொம்பு சவுந்திரராஜ பெருமாள் கோயிலில் பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. லட்சுமிநரசிம்ம பெருமாள் சுவாமிக்கு அபிஷேகங்கள் செய்யப்பட்டன. மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய நரசிம்ம பெருமாளுக்கு சிறப்பு பூஜையுடன் தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.