பதிவு செய்த நாள்
07
நவ
2014
12:11
ஓமலூர் : ஓமலூர், கோட்டை சங்கமேஸ்வரர் கோவிலில், ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு அன்னாபிஷேகம் நடந்தது. ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு, சிவன் கோவில்களில் அன்னாபிஷேகம் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, ஓமலூர், கோட்டை சங்கமேஸ்வரர் கோவிலில் நேற்று, சங்கமேஸ்வரர் கோவில் கமிட்டியினர், ஸ்வாமிக்கு, சாதம், காய்கறிகள், குழம்பு வகைகள் சாத்தப்பட்டு, அன்னாபிஷேகம் செய்து, சிறப்பு பூஜைகள் செய்தனர்.ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, ஸ்வாமி தரிசனம் செய்தனர். பின்னர், கோவில் கமிட்டி சார்பில் பக்தர்கள் அனைவருக்கும், அன்னதானம் வழங்கப்பட்டது.