சாயல்குடி : சாயல்குடி, நரிப்பையூர் காமராஜபுரத்தில் வினைதீர்த்த விநாயகர், பத்திரகாளியம்மன், மாரியம்மன் கோயில் மற்றும் பரிவார தேவைதைகளுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. நேற்று காலை வேதவிற்பன்னர்கள் மந்திரங்கள் முழங்க கடம் புறப்பாடு நடந்தது. காலை 9.30 மணிக்கு கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. முன்னாள் ஊராட்சி தலைவர் சேர்மக்கனி காமராஜ், கிராம தலைவர் அன்பழகன் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.