செஞ்சி: செஞ்சி ஹசரத் சையத் யூசுப் ஷா அவுலியா தர்காவில் சந்தனகூடு உற்சவம் நடந்தது. செஞ்சி பீரங்கிமேடு ஹசரத் சையத் யூசுப் ஷா அவுலியா தர்காவில் 81வது ஆண்டு சந்தன கூடு உற்சவம் நடந்தது. இதை முன்னிட்டு கடந்த 7ம் தேதி இரவு ஹசரத் சையத் யூசுப் ஷா அவுலியா தர்காவில் இருந்து சந்தன கூடு புறப்பட்டு செஞ்சி செட்டிப்பாளையம் மஹான் ஹசரத் சையத் காஜா பதவுல்லா ஷா அவுலியா தர்காவை சென்றடைந்தது. அங்கு சந்தனம் ஏற்றி பாத்தியா ஓதி தப்ரூக் வழங்கினர். அங்கிருந்து புறப்பட்டு சிலம்பாட்டம், வீர விளையாட்டுக்களுடன் ஊர்வலமாக வந்து ஹசரத் சையத் யூசுப் ஷா அவுலியா தர்காவை அடைந்து அதிகாலை 5:00 மணிக்கு சந்தனம் ஏற்றி பாத்தியா ஓதி, தப்ரூக் வழங்கினர். முன்னதாக தர்கா வளகாத்தில் பொது விருந்து நடந்தது. தொடர்ந்து 8ம் தேதி காலை 6 மணிக்கு ஹசரத் சையத் அம்பர் ஷா அவுலியா தர்காவில் சந்தனம் ஏற்றி பாத்தியா ஓதி தப்ரூக் வழங்கினர். மாலை 4:00 மணிக்கு ஹசரத் சையத் யூசுப் ஷா அவுலியா தர்காவில் சந்தனம் புறப்பட்டு செஞ்சி கோட்டையில் உள்ள மஹான் ஹசரத் சையத் தாதாபீர் அவுலியா தர்காவை அடைந்து, சந்தனம் ஏற்றி பாத்தியா ஓதி தப்ரூக் வழங்கினர். இரவு 10 மணிக்கு இன்னிசை நிகழ்ச்சி நடந்தது. விழா ஏற்பாடுகளை செஞ்சி உரூஸ் கமிட்டியார் செய்திருந்தனர்.