பதிவு செய்த நாள்
14
நவ
2014
12:11
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அக்னீஸ்வரருக்கு மகாதேவ அஷ்டமியை முன்னிட்டு, இன்று, "அயுதநாமாவளி எனப்படும், 10 ஆயிரம் அர்ச்சனை செய்து சிறப்பு வழிபாடு நடக்கிறது. தஞ்சை, தேவி உபாசகர் நிவாசசர்மா, தஞ்சை சரஸ்வதி மஹாலில் உள்ள பழைய கையெழுத்து படிவங்களில், தெலுங்கு மொழியில் சிவபெருமானுக்கு "அயுதநாமாவளி என்ற பெயரில், 10 ஆயிரம் அர்ச்சனை உள்ளதை தமிழிலும், வடமொழியிலும் பெயர்த்து அளித்தார். இதை கடந்த, 10 ஆண்டுகளாக திருக்காட்டுப்பள்ளி அக்னீஸ்வரருக்கு, மகாதேவ அஷ்டமியில் செய்து சிறப்பு வழிபாடு நடத்தி வருகின்றனர். தொடர்ந்து, மகா தீபாராதனை நடைபெறும். சவுந்தரநாயகி அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனை, சகஸ்ரநாம அர்ச்சனை நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் அர்ச்சகர் குமார் சிவாச்சாரியார் செய்து வருகின்றனர்.