கார்த்திகை அமாவாசை கழித்து மூன்றாம் நாளான திரிதியையன்று கொண்டாடப்படுவது தங்கத்திருநாளான ரம்பாதிரிதியை. தேவலோக அழகி ரம்பை தன் அழகும், ஆபரணமும் பெருகுவதற்காக இந்திரனின் ஆலோசனைப்படி காத்யாயினி என்ற அம்பிகையை விரதம்இருந்து வழிபட்டாள். மஞ்சளினால் அம்பிகைக்கு பிரதிமை(உருவம்) செய்து வழிபட்டதால் இந்நாளுக்கு திந்திரிணீ கவுரி விரதம் என்றும் பெயர். அம்பிகை தங்க நிறத்தில் சுவர்ண கவுரியாக காட்சியளித்து, ரம்பைக்கு தேவலோகத்தின் முதல் அழகி என்ற வரத்தை அருள்புரிந்தாள்.சென்னை குன்றத்துõர் முருகன்கோயிலில் இருந்து திருநீர்மலைக்குச் செல்லும் சாலையில் உள்ள காத்யாயினி அம்மன் கோயிலில் நவ.24 அன்று மாலையில் கலசபூஜையும், நவ.25ல் ரம்பா திரிதியை விழாவும் நடக்கிறது. நிகழ்ச்சியில் காத்யாயினி அம்மன் காலை 8.00 முதல் இரவு 9.00 வரை ஸ்வர்ண(தங்க) அலங்காரத்தில் காட்சிதருகிறாள். அப்போது சந்நிதியில் அர்ச்சனை செய்து நகைளை அணிந்தால் பொன்,பொருள் சேரும் என்பது ஐதீகம். புதிய நகை வாங்க இந்த நாள் மிகவும் ஏற்றது.— கே.குமாரசிவாச்சாரியார்