ஹரியாகிய விஷ்ணுவுக்கும், ஹரனாகிய சிவனுக்கும் பிள்ளையாக ஹரிஹரபுத்திரனாக ஐயப்பன் அவதரித்தார். கைலாயத்தில் வளர்ந்தார். பின், மானிடரூபம் எடுத்து, பந்தள மன்னரின் வளர்ப்பு மகன் மணிகண்டனாக மாறினார். புலிப்பாலுக்காக காட்டுக்குச் சென்ற அவர், மஹிஷியை வதம் செய்தார். தனது அவதார நோக்கம் நிறைவேறிய பின், சபரிமலையில் கோயில் கொண்டார். இதுதான் வழக்கமாகச் சொல்லப்படும் வரலாறு. ஆனால், ‘பூதநாதோபாக்கியானம்’ என்ற நுõலில், சற்று மாறுதலான கதை சொல்லப்படுகிறது. பந்தளமன்னருக்குப் பதிலாக பாண்டியமன்னரின் சேவகனாக ஐயப்பன் இருந்ததாகவும், அவரைப் புலிப்பால் கொண்டு வர அனுப்பியதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. பந்தளமன்னரின் முன்னோர் பாண்டிய மரபினர் என்று வரலாறு உறுதிப்படுத்துகிறது.