பதிவு செய்த நாள்
19
நவ
2014
12:11
ஆனைமலை: ஆனைமலை மண்கண்டேஸ்வர் மடாலயத்தில், அகில இந்திய பூஜாரிகள் பேரவையின், கிராம பூஜாரிகளுக்கு கோவில் வழிபாட்டு முறையில் கடைப்பிடிக்க வேண்டி நெறிமுறைகள் குறித்த ஆலய வழிபாட்டு பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சி முகாமினை மண்கண்டேஸ்வர மடாலய ஆதீனம் சிவனேச அடிகள் துவக்கி வைத்தார். இதில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த 50க்கும் மேற்பட்ட கிராம பூ ஜாரிகள் பங்கேற்றனர். 15 நாட்கள் நடைபெறும் இந்த முகாமில் கிராம கோவில்களில், முறையான வழிபாடுகளை மேற்கொள்ளுதல், நித்திய கால பூஜைகள், அபிேஷகம், அலங்காரம், மந்திரங்களை உச்சாடனம் செய்வது, பூஜைக்குரிய மந்திரங்களை மனப்பாடம் செய்தல், கோவில் நடைதிறத்தல் முதல் நடை சாத்துதல் வரை கடைப்பிடிக்க வேண்டிய ஆகம முறைகள் போதிக்கப்பட உள்ளன. பூஜாரிகளிடம் சிவனேச அடிகள் பேசும் போது, ஒரு கால பூஜை நடைபெறும் கோவில்களில், போதிய உபயதாரர்களை கொண்டு மூன்று கால பூஜை நடைபெற கிராம பூசாரிகள் முய ற்சி மேற்கொள்ள வேண்டும், என்றார்.