பாலசுப்ரமணிய சுவாமி கோவிலில் லட்சார்ச்சனை துவக்கம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20நவ 2014 01:11
பொன்னேரி: ஆண்டார்குப்பம், பாலசுப்ரமணிய சுவாமி கோவிலில், நாளை மறுநாள், லட்சார்ச்சனை பெருவிழா துவங்குகிறது. பொன்னேரி அடுத்த, ஆண்டார்குப்பத்தில், பாலசுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளது. இங்கு, நாளை மறுநாள்(22ம்தேதி), குமார சஷ்டி லட்சார்ச்சனை பெருவிழா துவங்குகிறது. ஆறு நாட்கள் நடைபெறும் இவ்விழா, வரும் 27ம்தேதியுடன் முடிவடைகிறது. தினமும், காலை மற்றும் மாலை நேரங்களில், லட்சார்ச்சனை நடைபெறும்.