Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பக்தர்கள் வசதிக்காக ..பம்பையில் ... சபரிமலை வழிபாடு கட்டணம்: நெய்யபிஷேகம் ரூ.10..படிபூஜைக்கு ரூ.40 ஆயிரம்! சபரிமலை வழிபாடு கட்டணம்: ...
முதல் பக்கம் » ஐயப்பன் செய்திகள்
நடை திறக்கும், அடைக்கும் நேரம் மாற்றம்: தேவசம்போர்டு முடிவு அமல்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

24 நவ
2014
11:11

சபரிமலை: பக்தர்கள் கூட்டத்திற்கேற்ப சபரிமலையில் நடை திறந்து அடைக்கும் நேரத்தை மாற்றியமைத்து திருவிதாங்கூர் தேவசம்போர்டு உத்தரவிட்டது. இது நேற்று அமலுக்கு வந்தது.

சபரிமலையில் மண்டலபூஜை காலத்தில் அதிகாலை நான்கு மணிக்கு நடை திறந்து பகல் ஒரு மணிக்கும், மாலை நான்கு மணிக்கு நடை திறந்து இரவு 11 மணிக்கும் அடைக்கப்படும். பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் நாட்களில் 24 மணி நேரமும் 18-ம் படியில் பக்தர்கள் ஏற்றப்படுகின்றனர். நடை அடைக்கப்பட்டிருக்கும் போது படியேறுபவர்கள் மீண்டும் வடக்கு வாசல் வழியாக சென்று சாமி கும்பிட வேண்டும். கூட்டம் மிக அதிகமாக இருக்கும் போது பல சிரமங்கள் ஏற்படுகிறது.

எனவே கூட்டம் அதிகமாக இருக்கும் நாட்களில் மட்டும் நடை திறந்திருக்கும் நேரத்தை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி அதிகாலை நான்கு மணிக்கு பதிலாக 3.00-க்கு நடை திறக்கும். பகல் ஒரு மணிக்கு பதிலாக 1.30மணிக்கு அடைக்கப்படும். மாலையில் நான்கு மணிக்கு பதிலாக 3.00 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 11 மணிக்கு பதிலாக 11.45-க்கு அடைக்கப்படும்.

கூட்ட நிலைமைக்கேற்ப கோயில் நிர்வாக அதிகாரி, தந்திரி மற்றும் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசித்து முடிவெடுப்பார். நேற்று முன்தினம் சனிக்கிழமை மாலையிலும், இரவிலும் பக்தர்கள் கூட்டம் மிக அதிகமாக இருந்ததால் நேற்று அதிகாலை 3.00 மணிக்கு நடைதிறந்தது. எனினும் நேற்று பகலில் பக்தர்கள் கூட்டம் குறைந்ததால் மாலையில் வழக்கம் போல 4 மணிக்குதான் நடை திறந்தது.

 
மேலும் ஐயப்பன் செய்திகள் »
temple news
சபரிமலை; பக்தர்களின் வசதிக்காக பெருவழிப்பாதை மற்றும் புல்மேடு - சத்திரம் பாதையில் பக்தர்கள் ... மேலும்
 
temple news
சபரிமலை: கேரள உயர்நீதிமன்றத்தின் உத்தரவு எதிரொலியாக சபரிமலையில் இயல்பு நிலை திரும்பியது. ஸ்பாட் ... மேலும்
 
temple news
சபரிமலை; கேரளாவின் சபரிமலை அய்யப்பன் கோயில் மண்டல பூஜை கடந்த 17ல் துவங்கியது. இதையொட்டி, 16ம் தேதி மாலை ... மேலும்
 
temple news
திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் கூட்ட நெரிசல் அதிகரித்துள்ளதற்கு அதிருப்தி தெரிவித்த கேரள ... மேலும்
 
temple news
சபரிமலை: கேரள மாநிலம், சபரிமலையில் மண்டல சீசன் துவங்கிய முதல் இரு நாட்களிலேயே பக்தர்கள் கூட்டம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   ஐயப்ப தரிசனம் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar