பதிவு செய்த நாள்
25
நவ
2014
11:11
புதுச்சேரி: வைத்திக்குப்பம், அக்காசுவாமி கோவில் திருப்பணியை, முதல்வர் ரங்கசாமி துவக்கி வைத்தார். வைத்திக்குப்பம் அக்காசுவாமி கோவிலில், அன்னதான மண்டபம் மற்றும் கோவில் சீரமைப்பு பணிகள் 78 ரூபாய் லட்சம் செலவில் மேற்கொள்ளப் பட உள்ளது. திருப்பணி துவக்க விழா நேற்று நடந்தது. முதல்வர் ரங்கசாமி பங்கேற்று, பூமி பூஜை செய்து பணியை துவக்கி வைத்தார். லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ., இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குணசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கோவில் திருப்பணி திட்டத்தின் கீழ், கோவிலின் கிழக்கு பகுதியில் 3430 சதுர அடியில் அன்னதான மண்டபம், விநாயகர், முருகன், கருவறை மற்றும் சுற்றுப்புற சன்னதிகளை புதுப்பித்தல், நடராஜர் சன்னதிக்கும், நால்வர் சன்னதிக்கும் இடைப்பட்ட பகுதியில் சிமென்ட் தளம் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. ஏற்பாடுகளை, கோவில் சிறப்பு அதிகாரி செல்வம் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.