செஞ்சி: செஞ்சி கோதண்டராமர் கோவிலில் 3 கோடியே 58 லட்சம் ரூபாய் மதிப்பில் திருப்பணிக்காக 27ம் தேதி பாலாலயம் செய்ய உள்ளனர். செஞ்சி சங்கராபரணி ஆற்றங்கரையில் 700 ஆண்டுகள் பழமையான கோதண்டராமர், பிரசன்ன வெங்கடேச பெருமாள், கிருஷ்ணவேணி தாயார் கோவில் உள்ளது. படையெடுப்பினால் அழிந்து போன இக்கோவிலை 3 கோடியே 58 லட்சத்து 92 ஆயிரத்து 400 ரூபாய் மதிப்பில் திருப்பணி செய்து புதுப்பிக்க உள்ளனர். இதற்கான பாலாலயம் வரும் 27ம் தேதி காலை நடக் கிறது. இதை முன்னிட்டு 7 மணிக்கு சிறப்பு பஜனை, 8 மணிக்கு கோபூஜை, 9 மணிக்கு திருமஞ்சனம், 9.30 மணிக்கு சுதர்சன யாகம், 10 மணிக்கு பூமி பூஜை நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோதண்டராமர் ஆலய அறக்கட்டளை நிர்வாகிகள் செய்கின்றனர்.