செஞ்சி: செஞ்சி அன்னை பவதாரிணி நகர் சித்தாஸ்ரம ஏகாம்பரேஸ்வரருக்கு கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு சங்காபிஷேகம் செய்தனர். செஞ்சி சிறுகடம்பூர் அன்னை ஓம் பவதாரிணி நகரில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் பகவான் யோகி ராம் சுரத்குமாரின் 96வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு வாஞ்சா லலிதா திரிபுரசுந்தரிக்கு 36 நாள் சகஸ்ர நாம கோடி அர்ச்சனை வைபவம் நடந்து வருகிறது. நேற்று கார்திகை சோமவாரத்தை முன்னிட்டு ஏகதச சங்காபிஷேகம் நடந்தது. நேற்று மாலை 5 மணிக்கு அன்னை ஓம் பவதாரிணி முன்னிலையில் கலச பிரதிஷ்டை செய்து சிறப்பு பூஜைகள் செய்தனர். மாலை 6 மணிக்கு ஏகாம்பரேஸ்வரர், காமாட்சியம்மனுக்கு லலிதா சங்காபிஷேகம், கலசாபிஷேகம் நடந்தது. சகஸ்ரநாம கோடி அர்ச்சனையின் நிறைவாக வரும் 30ம் தேதி மாலை 4 மணிக்கு திருவிளக்கு பூஜை செய்ய உள்ளனர்.