பதிவு செய்த நாள்
26
நவ
2014
12:11
வேலூர்: வேலூரில் திருக்குடை ஊர்வலம் வந்தது. ஹிந்து மஹா சபா சார்பில், திருமலை திருப்பதி, திருச்சானூர் பத்மாவதி தாயாரின் கார்த்திகை பிரமோற்சவத்தை முன்னிட்டு, கஜபகவான் சேவைக்கு ராஜ திருக்குடைகள் சமர்ப்பன ஊர்வலம் கடந்த, 19ம் தேதி சென்னையில் இருந்து புறப்பட்டது. வேலூர் மாவட்டம் கே.வி. குப்பம், விரிஞ்சிபுரம், செதுவாலை வழியாக வேலூருக்கு நேற்று வந்தது. பக்தர்கள் திருக்குடை ஊர்வலத்தை வரவேற்றனர். பின்னர் திருச்சானூருக்கு புறப்பட்டுச் சென்றது. ஏற்பாடுகளை, ஹிந்து மஹா சபா தென்னிந்திய ஒருங்கிணைப்பாளர் வசந்த்குமார், மாநில பொது செயலாளர் சரவண குமார், வேலூர் மாவட்ட தலைவர் சந்தோஷ், தலைமை நிலைய செயலாளர் தாஸ், மாநிலத்தலைவர் செல்வகுமார், தலைமை நிலைய செயலாளர் சாதுசாமி, வேலூர் மாவட்ட செயலாளர் அருண்குமார் ஆகியோர் செய்தனர்.