தேனி மாவட்டத்தில் ஐயப்ப பக்தர்களுக்கு சிறப்பு சோதனை சாவடி!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26நவ 2014 12:11
தேனி : தேனி மாவட்டத்தில் சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு போலீசார், ஐயப்பசேவா சங்கம், ஊர்க்காவல் படையினர் இணைந்து சிறப்பு சோதனை சாவடி அமைத்துள்ளனர். சபரிமலை சீசன் தொடங்கி உள்ளதால் தினமும் பல லட்சம் ஐயப்ப பக்தர்கள் தேனி மாவட்டத்தை கடந்து சபரிமலைக்கு செல்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் வாகனங்களில் வருகின்றனர். இவர்களுக்கு உதவி செய்யும் வகையிலும், இளைப்பாறுதல் தரும் வகையிலும், ஐந்து இடங்களில் சோதனை சாவடி அமைத்துள்ளனர்.திண்டுக்கல் ரோட்டில் தேவதானப்பட்டி மேரிமாதா கல்லூரி அருகிலும், வீரபாண்டி, சின்னமனூர், லோயர்கேம்ப், கம்பம் மெட்டில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு குடிநீர், முகம் கழுவ, இளைப்பாறுதல் தர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இலவசமாக சுக்குகாபி வழங்கப்படுகிறது.போலீசார் இவர்களை நிறுத்தி, இளைப்பாறுதல் மையத்திற்கு சென்று தங்கி ஓய்வெடுத்து காபி சாப்பிட்டு செல்லுமாறு வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். இதன் மூலம் மாவட்டத்தில் பக்தர்கள் ஓய்வெடுத்து பயணிக்கின்றனர். இதன் மூலம் விபத்துக்கள் தவிர்க்கப்படுகிறது என போலீசார் தெரிவித்தனர்.