மணல்மேடு- பந்தநல்லூர் சாலையில் சற்று உள்வாங்கிய கிராமம் விளார்த் தொட்டி. இங்குள்ள கோயிலில், பிறந்து சில நாட்களே ஆன சின்னஞ்சிறு குழந்தையாக முருகன் அருள்பாலிக்கிறார். குழந்தை பாக்யம் தரும் இந்த முருகனை பக்தர்கள் தொட்டியலில் இட்டு தாலாட்டி நேர்த்திக் கடன் நிறைவேற்றுவார்கள்.