பங்குனி உத்திர விழா: பழநி முருகன் கோயிலில் பால் குடம், காவடியுடன் குவிந்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஏப் 2026 10:04
பழநி: பழநி பங்குனி உத்திர திருவிழாவில் இன்று பால் குடம், காவடி எடுத்து, ஆட்டம் பாட்டம் கொண்டாடித்துடன் பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
அறுபடை வீடுகளில் மூன்றாம்படை வீடான பழநி திருஆவினன்குடியில் பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் மார்ச் 31ம் தேதி நேற்று நடைபெற்றது. தொடர்ந்து இன்று பங்குனி உத்திரத்தை முன்னிட்டு தேரோட்டம் நடைபெறுகிறது. ஏராளமான பக்தர்கள் பால் குடம், காவடி எடுத்து, ஆட்டம் பாட்டம் கொண்டாடித்துடன் குவிந்து வருகின்றனர். எங்கும் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. ஏப்ரல் 4ம் தேதியன்று கொடியிறக்கத்துடன் பங்குனி உத்திரத்திருவிழா நிறைவடைகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை பழனி கோவில் நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் செய்து வருகின்றனர்.