பதிவு செய்த நாள்
02
டிச
2014
12:12
பள்ளிப்பட்டு: மரகதவள்ளி உடனுறை சோமநாதீஸ்வரர் மலைக்கோவிலில், நேற்று, கார்த்திகை மூன்றாம் திங்களை ஒட்டி, சிறப்பு உற்சவம் நடந்தது. இதில், 5,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்தனர்.கார்த்திகை திங்கள்பள்ளிப்பட்டு அடுத்த வெளியகரம் கிராமத்தின் மேற்கே, மலை மீது அமைந்துள்ளது மரகதவள்ளி உடனுறை சோமநாதீஸ்வரர் கோவில். கார்த்திகை திங்கள்கிழமைகளில் இங்கு சிறப்பு உற்சவம் நடத்தப்படுகிறது. நேற்று, மூன்றாம் திங்கள்கிழமையை ஒட்டி, சிறப்பு உற்சவம் கொண்டாடப்பட்டது. காலை 10:00 மணிக்கு, அபிஷேகம், அலங்காரம் நடந்தது. தொடர்ந்து இரவு 7:00 மணி வரை சுவாமி தரிசனத்திற்காக, நடை திறந்திருந்தது. உற்சவத்தை ஒட்டி, வெளியகரம், சாணாகுப்பம், குமாரராஜிபேட்டை, பெருமாநல்லுார் உள்ளிட்ட 30 கிராமத்தினர், சுவாமியை தரிசனம் செய்தனர். பிரகதீஸ்வரர் விழாவை ஒட்டி, திரளான பக்தர்கள் மலை மீது குவிந்திருந்தனர். வரும் திங்கள்கிழமை, சோமநாதீஸ்வரர் கோவிலுக்கு, வெளியகரம் கிராமத்தில் உள்ள பிரகதீஸ்வரர் உற்சவ பெருமான் எழுந்தருளிகிறார்.