திருவண்ணாமலை: திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவில் தேரோட்டம் நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து, நேர்த்திக்கடன் செலுத்தினர்.
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப விழாவில் முக்கிய விழாவான, மஹா ரத தேரோட்டத்தில், 60 டன் எடை கொண்ட, 63 அடி உயரமுள்ள மஹா ரதத்தில், அண்ணாமலையார் சமேத உண்ணாமுலையம்மன் அலங்கரிக்கப்பட்டு, சிறப்பு பூஜைக்கு பின் மாட வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இந்த மகா தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து “அண்ணாமலையாருக்கு அரோகரா’ என கோஷத்துடன் தேர் இழுத்தனர்.