பதிவு செய்த நாள்
03
டிச
2014
12:12
நரசிங்கபுரம்: நரசிங்கபுரம், திருமுருகன் கோவிலில், இன்று, 15ம் ஆண்டு திருவிளக்கு பூஜையும், நெய் அபிஷேகமும் நடைபெற உள்ளது. கடம்பத்துார் ஒன்றியம், பேரம்பாக்கம் அடுத்துள்ள நரசிங்கபுரத்தில், திருமுருகன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில், ஆண்டுதோறும் அய்யப்ப சேவா சங்கம் சார்பில், திருவிளக்கு பூஜையும், மகா அபிஷேகமும் நடைபெறும். அதன்படி, இந்த ஆண்டு 15ம் ஆண்டு திருவிளக்கு பூஜையை முன்னிட்டு, காலை, 10:30 மணிக்கு, மகா அபிஷேகமும், பகல், 12:00 மணிக்கு, அய்யப்ப சுவாமிக்கு, நெய் அபிஷேகமும், மகா தீபாராதனையும் நடைபெறும். அதன்பின், மாலை, 5:00 மணிக்கு, 108 திருவிளக்கு பூஜையும், இரவு, 7:00 மணிக்கு, அய்யப்ப சுவாமி வீதிஉலாவும், இரவு, 11:00 மணிக்கு, ஜோதி தரிசனமும் நடைபெறும்.