கரூர்:கரூர் வெண்ணைமலை பாலசுப்பிரமணிய ஸ்வாமி கோவிலில், 40ம் ஆண்டு படி பூஜைவிழா இன்று நடக்கிறது. இதுகுறித்து கரூர் வெண்ணைமலை பாலசுப்பிரமணிய ஸ்வாமி கோவிலில் படிபூஜை விழா ஏற்பட்டாளர்கள் கூறியதாவது:இன்று காலை கோவிலில் முதல் நிகழ்ச்சியாக விநாயகர் அபிஷேகம், மற்றும் ஆராதனை நடக்கிறது. அதைத் தொடர்ந்து காலை, 7 மணிக்கு மேல் மலையைச் சுற்றி கிரிவலம் வருதல் நிகழ்ச்சி நடக்கிறது. காலை, 9 மணிக்கு மேல் படி பூஜை விழாவும், 11 மணிக்கு பாலசுப்பிரமணிய ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. மதியம், 12.30 மணிக்கு அன்னதானம் நடக்கிறது. படி பூஜை விழாவில், ஹரிஹர பிரம்மானந்த பஜனை குழுவினரின் பஜனை நடக்கிறது என்று கூறனர்.